முதலிரவில் பால் கொண்டுபோவதற்கு காரணம் இதுதான்.!

இந்திய கலாச்சாரங்கள் பலவற்றில் இயற்கை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. உணவு முறைகள் முதல் உடலுறவு வரை எல்லாவற்றிற்கும் தனி சிறப்புகள் இந்திய கலாச்சாரத்தில் இருக்கிறது.

இந்திய உணவு முறையில் வாழை இலையில் உணவு பரிமாறுதல் மிக முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. வாழை இலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த நோய்கள், இதய நோய்கள் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளது.

இந்திய கலாச்சாரத்தின் படி கைகளால் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிகளவில் ஆரோக்கியம் கிடைக்கும். ஒவ்வொரு விரல்களும் உடலில் உள்ள ஒவ்வொரு சக்கரத்தை சீராக வைத்து கொள்ளும். இந்தியா மட்டுமன்றி ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்த பழக்கம் உள்ளது.

இந்திய கலாசாரத்தின் படி திருமணமான நாளின், முதல் இரவில் தான் தங்களது தம்பாத்திய வாழ்வை தொடங்குவார்கள். அப்போது பெண்ணின் கையில் பால் சொம்பை கொடுத்து விடுவது வழக்கமான ஒன்று. இதற்கு பின்னால் நம் முன்னோர்கள் ஒரு முக்கிய இரகசியத்தை மறைத்து வைத்துள்ளனர்.

அவ்வாறு முதலிரவின் போது இருவரும் பால் குடித்தால் இனப்பெருக்க உறுப்புகளளின் திசுக்கள் இலகுவாகி புத்துணர்வுடன் வைத்து கொள்ளும். இந்த அற்புத தன்மை பாலிற்கு உண்டாம். மேலும், உடலுக்கு அதிக ஆற்றலை தந்து நீண்ட நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட உதவுமாம். மேலும், மன அழுத்தத்தையும் இது குறைக்கும்.