இன்றைய ராசிபலன் (06/04/2019)

  • மேஷம்

    மேஷம்: காலை 7.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலை யாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்

  • ரிஷபம்

    ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்துலாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மதிப்புக்கூடும் நாள்

  • கடகம்

    கடகம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சாத்வீகமான எண்ணங்கள் வரும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்தபணத்தை திருப்பித் தருவீர் கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: காலை 7.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங் குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினா லும் உணர்ச்சி வசப்படாதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோ கத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோ கத்தில் உங்
    களின் கடின உழைப்பால் அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். அமோகமான நாள்.

  • தனுசு

    தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங் களை முடிப்பீர்கள். பழையகடனைப் பற்றி அவ்வப் போதுயோசிப்பீர்கள். பயணங் களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுது ணையாக இருப் பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.