திருமண வாழ்வோடு சேர்த்து, நாக்கையும் துண்டித்த கொடூரக் கணவன்…!

பாகிஸ்தானில் மனைவியின் நாக்கை கத்தரிக்கோலால் வெட்டிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முஸ்டாபாபெட் கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது; ஜஹாங்கிர் என்ற நபர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர்தான் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.இந்நிலையில், திடீரென தனது மனைவியின் வீட்டுக்கு சென்ற ஜஹாங்கிர், அறையின் கதவை அடைத்துவிட்டு தனது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

பின்னர், கத்தரிக்கோலை எடுத்து மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார்.இதில், நிலைகுலைந்து விழுந்த அப்பெண்ணை அவரது தாய் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெண்ணின் தந்தை கூறியதாவது, விவாகரத்து செய்த நாளிலிருந்து எப்படியாவது எனது மகளை கொலை செய்ய வேண்டும் என இருந்துள்ளான். இதனால், யாரும் எதிர்பார்க்காத போது வீட்டுக்குள் நுழைந்து தாக்கியுள்ளான். அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக, பொலிசார் விசாரணை நடத்தி ஜஹாங்கீரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.