கள்ளகாதலனின் ஆசையால் அரங்கேறிய விபரீதம்.!!

சேலம் நகரில் உள்ள இரயில் நிலையம் செல்வதற்கு உறிய சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவருக்கு சொந்தமாக ஐஸ்க்ரீம் கடை உள்ளதால்., அதனை நடத்தி மேற்பார்வை செய்து வந்தார். இந்த கடையில்., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஆசாத் நகர் பகுதியை சார்ந்த ஷீரன் சித்தாரா என்பவர் பணியாற்றி வந்தார்.

அவ்வப்போது வெளியூர் பயணத்திற்கு சென்று வரும் பாண்டியராஜன்., வெளியூருக்கு செல்லும் நேரத்தில் கடையை பார்த்துக்கொள்ள கூறி ஷீரனிடம் கடையின் சாவியை வழங்கி செல்வது வழக்கம். உரிமையாளர் இல்லாத நேரத்தில்., கடைக்கு வந்து கடையை ஷீரன் கவனித்து வந்து சென்றுள்ளார். இந்நிலையில்., நேற்று பணிசூழல் காரணமாக வெளியே சென்ற பாண்டியராஜன் காலையில் கடைக்கு வருகை தந்துள்ளார்.

அந்த சமயத்தில் கடை திறக்காமல்., ஷட்டர் மட்டும் அடைக்கப்பட்டு உளதாளிட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரை அழைத்து ஷட்டரை திறக்க முயற்சி செய்ததும் பலனளிக்காததால்., சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஷட்டரை உடைத்து கதவை திறந்தனர்.

கதவை திறந்ததும் கடையில் பணியாற்றிய ஷீரன் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில்., அவரின் அருகேயே சுமார் 54 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாது திகைக்கவே., இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., ஷீரன் சித்தாரா பானு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் இல்லத்தில் வசித்து வருகிறார். ஷீரன் பணியாற்றி வந்த கடைக்கு அருகில் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பி வைக்கும் அதிகாரியாக இருந்தவர் இனாமுல்லா.

முல்லா ஆட்களை வெளிநாட்டிற்கு பணிக்கு அனுப்பி வைப்பவர் என்பதால்., அவரிடம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க கூறி முறையிட்ட சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஷீரன் தனது நடவடிக்கைகளை முல்லாவிடம் இருந்து விளக்கிக்கொள்ளவே மீண்டும் தன்னிடம் பேசுமாறும்., திருமணம் செய்துகொள்ள கூறியும் வற்புறுத்தியுள்ளார்.

இது குறித்து முல்லா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது., கடந்த நான்கு வருடங்களாக முறையற்ற பழக்கத்தில் இருந்து வந்ததை அடுத்து., இதனை அறிந்த எனது குடும்பத்தார் என்னை வெறுத்து ஒதுக்கினர். இதனால் அனாதையான நான்., ஷீரனை திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்ற எண்ணத்தில் சுமார் 10 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதி அவரிடம் வழங்கினேன். மேலும்., இனி இருவரும் இணைந்து நல்வாழ்க்கை வாழலாம் என்று கூறினேன்.

இதனை ஏற்காத ஷீரன் என்னிடம் இருந்து விலகிக்கொள்ளவே., அவரை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது. சம்பவத்தன்று கடையின் உரிமையாளர் கடையில் இல்லாததை அறிந்த நான்., ஷீரனிடம் சென்று மீண்டும் திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தினேன். இதனை அவர் மீண்டும் ஏற்க மறுத்ததால் அவரை கொலை செய்து நானும் தற்கொலை செய்து கொண்டேன்.

மேலும்., இந்த கொலைக்கும் தற்கொலைக்கும் நானே முழுக்க முழுக்க பொறுப்பு என்று எழுதி அதில் கையெழுத்திட்டு., பின்னர் முல்லாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.