இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தை சார்ந்த 20 வயதுடைய பெண்மணி நடன பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவர் டெல்லி நகரில் இருக்கும் கஜரி காஸ் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
அதன்படி பயணத்திற்கு தயாராகி கடந்த ஆறு நாட்களுக்கு முன்னதாக பேருந்தின் மூலமாக காஷ்மீர் பகுதியில் இருக்கும் எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளார். அந்த சமயத்தில்., இவர் செல்லும் இடங்கள் குறித்த விபரத்தை அறிந்த மூன்று வாலிபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அதே பகுதியை சார்ந்த அந்த வாலிபர்கள் லோகேஷ் (வயது 21)., ஓம் (வயது 25)., ரிஷிகேஷ் (வயது 25) என்பவர்கள் அவரை அந்த நடன நிகழ்ச்சிக்கு காரில் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து இவர்களை நம்பிய பெண்மணி அவர்களுடன் காரில் செல்லவே., அங்குள்ள பாவனா என்ற பகுதிக்கு வந்தவுடன்., தனி வீட்டிற்கு அழைத்து சென்று அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி., அவரின் அலைபேசியை பறித்து சென்றுள்ளனர்.
மேலும்., இது குறித்து யாரிடமும் கூறும் பட்சத்தில் புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து டெல்லி வந்தடைந்த இவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.