திராவிடர் கழக தலைவர் வீரமணி இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்தும், சில பெண் தெய்வங்கள் குறித்தும் மோசமாக பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பி வருகிறது. பிராமணர் சங்கம் மற்றும் சில இந்து அமைப்புகள் வீரமணியின் இந்த பேச்சை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஸ்டாலின் செய்தியாளருக்கு அளித்த பேட்டி அளித்தபோது பராசக்தி படத்தில் இடம்பெற்ற கலைஞரின் வசனத்தை மேற்கோள் காட்டி பேசினார்.
அதில், “ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் கி. வீரமணி விவகாரத்தில் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. திராவிட கழக தலைவர் கி. வீரமணி கிருஷ்ணர் குறித்து பேசியது உண்மை எனில் அது தவறு தான். வீரமணி உள்நோக்கத்துடன் கூறவில்லை. கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினார்.
மேலும், பெரியார் திடலில் தான் கி. வீரமணி கிருஷ்ணர் குறித்து பேசினார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசவில்லை. மத்திய மற்றும் மாநில ஆட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மீதும் மத்தியில் ஆளும் பாஜகவின் மோடி அரசின் மீதும் உள்ள மக்களின் வெறுப்பு 30 தொகுதிகளில் நான் தேர்தலுக்கென பிரசாரத்தில் ஈடுபட்டபோது எனக்கு தெரிந்தது.