பாதாம் பருப்பில் இருக்கும் வைட்டமின் “ஈ”யின் மூலமாக நமது சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலமாக நமது முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறந்து., இளமையும் அழகும் நமது முகத்தில் அழகை பாதுகாக்கிறது.
அந்த வகையில்., பாதாம் பருப்பின் மூலமாக நமது முகத்தின் அழகை பராமரிப்பதற்கு நிறைய முறைகள் உள்ளது. அதில் உள்ள மூன்று முறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
பாதாம் பருப்புடன் பால்:
பாதாம் பவுடர் – 1 தே.கரண்டி.,
காய்ச்சாத பால் – 2 தே.கரண்டி…
எடுத்துக்கொண்ட பாதாம் பவுடருடன் பாலை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தேய்த்து கொள்ள வேண்டும். பின்னர் 20 நிமி கழிந்து இளம் சூடுள்ள நீரில் முகத்தை கழுவினால் முகமானது பொலிவு பெரும்.
பாதாம் பருப்பு + பால் + அரைத்த ஓட்ஸ்:
பாதாம் பவுடர் – 2 தே.கரண்டி.,
அரைத்த ஓட்ஸ் – 1 தே.கரண்டி.,
காய்த்தது பால் – 3 தே.கரண்டி…
எடுத்துக்கொண்ட பொருட்களை நன்றாக கலந்து தூங்குவதற்கு முன்னதாக முகத்தில் நன்றாக போட்டு விட்டு பின்னர் ரோஜா தண்ணீரை வைத்து முகத்தை துடைத்து விட்டு., சுமார் 20 நிமிடங்கள் கழித்த பின்னர் இளம் சூட்டுடன் கொண்ட நீரை வைத்து கழுவினால் முகம் பொலிவு பெரும்.
பாதாம் பருப்பு + மஞ்சள் + கடலைமாவு:
எடுத்துக்கொண்ட பொருட்களை சிறிதளவு ரோஸ் நீருடன் சுரத்து கலந்து முகத்தில் மாஸ்க் போல தடவி விட்டு., பின்னர் சுமார் 15 நிமிடங்கள் கழிந்து இளம் சூடுள்ள நீரை வைத்து கழுவினால் முகமானது பொலிவு பெரும்.