அஜித் ஏன் பேட்டி கொடுப்பதில்லை தெரியுமா??

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், உச்சநட்சத்திரமாக விளங்குவர் நடிகர் அஜித். தற்போது அவரது நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் தல அஜித் பேட்டி கொடுப்பதையே விரும்பியது இல்லை அவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்ப்பது மிகவும் அரிது. தல அஜித்தை பேட்டி எடுத்த ஒரு சிலரில் (நீயா,நானா) புகழ் கோபிநாத்தும் ஒருவர். அப்போது தான் கோபிநாத்திற்கு தெரிந்ததாம் அஜித் ஏன் தொலைக்காட்சி பேட்டி அளிக்கவில்லை என்று தெரிந்ததாம்.

இதுக்குறித்து அஜித் கோபிநாத்திடம் கூறியவை, சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள். அதன் பிறகு, சரி ஆங்கிலத்தில் பேசினேன், ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள்.

இனி பேசவே வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதற்கு அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்று தல அஜித் கூறினாராம்.