8ம் வகுப்பு படித்து 1500 கோடி சொத்தா?…

தமிழகம் மட்டுமில்லாமல் உலக அளவில் பிரபலமான ஹோட்டல் சரவண பவன் என்றால் அவ்வளவு பிரபலமாக இருந்தது. இந்த உணவகத்தின் முதலாளி ராஜகோபல் தற்போது சிறையில் ஆயுள் கைதியாக இருந்து வருகிறார். ஒழுக்கம் தவறிய ஆணின் அவலநிலையை இங்கே காணலாம்.

வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து, வேலை தேடி சென்னைக்கு வந்து மளிகை கடையில் பொட்டலம் மடித்தும், ஹோட்டலில் டேபிள் துடைத்தும் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர்.

மிகச்சிறிய முதலீட்டில் ஓடாத ஒரு பழைய ஹொட்டலை வாடகைக்கு எடுத்து, தன்னுடைய இஷ்ட தெய்வமான முருகனின் பெயரையே அந்த ஓட்டலுக்கு வைத்து ஓட்டல் சரவணபவன் என்று முதன்முதலாக ஓட்டல் தொழிலுக்குள் இறங்கினார்.

தன்னுடைய அயராத உழைப்பினாலும், சுவையான, தரமான உணவினாலும் இன்று உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்களை திறந்து 1500 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட ஓட்டல் நிறுவனமாக அதை மாற்றி தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை மனிதனாக வாழ்ந்து காட்டி வலம் வந்த ராஜகோபால் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தன்னுடைய முதுமையை நோய்நொடியோடு ஜெயிலில் கழிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

ஒரு பெண்ணின் மீதான சபலம் தான்! அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும் அவள் மீது ஆசைப்பட்டது, அவளை அடைய முயற்சி செய்தது, அந்த முயற்சிக்கு தடையாக இருந்த அவளுடைய கணவனை கொன்றது. கடைசியில் அவருடைய காமம் கண்ணை மறைத்துவிட்டது.

படிப்பறிவு இல்லாத ஒரு சாதாரண மனிதன் உழைப்பால் முன்னேற வேண்டும் என்று நினைத்து அயராது உழைத்த போது கடவுள் முருகன் அவருடன் இருந்தார். அவருடைய உண்மையான உழைப்புக்கு ஆசீர்வாதங்களை வாரி வழங்கினார்.

அந்த சாதாரண மனிதனும் மேலே மேலே உயர்ந்து பல சாதனைகளை படைத்து சிகரங்களை தொட்டான். எப்போது அவனுடைய பார்வை அடுத்தவன் மனைவி மீது போனதோ அப்போதே அவனுக்கான பாவக்கணக்குகள் தொடங்கிவிட்டது… முருகனும் அவனை விட்டு விலகிவிட்டார்.

அதன்பின் அவன் செய்த அடுத்தடுத்த பாவங்களுக்கு தண்டனைக்கு மேல் தண்டனைகள் அதிகமாகி, அவருடைய குடும்பத்திற்கும், பிள்ளைகளுக்கும், மிகப்பெரிய அவப்பெயர் உண்டாகி, காலங்காலமாக நிலைத்து நின்று இந்த ஆளா இப்படி? பார்த்தா பெரிய மனுஷன் மாதிரி வேஷம் போட்டு திரிஞ்சானே என்று எல்லோருமே கேவலமாக பேசும் அளவுக்கு அத்தனை மரியாதையும் சரிந்து இன்று தரைமட்டத்திற்கு வந்துவிட்டார்.

அத்தனைக்கும் ஒரே ஒரு காரணம் பெண்ணாசை! அதுவும் பிறர் மனைவி மீதான ஆசை! ஒழுக்கம் தவறுவதோடு அடுத்த பெண்ணையும் ஒழுக்கம் தவற நிர்பந்தித்து, அல்லது அவளை தூண்டி தவறான பாதைக்கு இழுப்பது என்பது மன்னிக்க முடியாத பாவம்! இதுவே தவறு செய்கின்ற பெண்ணுக்கும் பொருந்தும்!

ஒழுக்கம் தவறி நடக்க ஆரம்பித்தால் எந்த கடவுளும் துணைக்கு வரமாட்டார்! குடும்பத்தினர் முன்பும், உறவினர்களின் முன்பும், ஊர் உலகத்தின் முன்பும், அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு மரியாதையை இழந்து எல்லோரும் காரித்துப்பும் அளவிற்கு கொண்டுவந்து நிறுத்தப்படுவது தான் ஒழுக்கம் கெட்டு அலைகின்ற அத்தனை ஆண் பெண்களுக்கான கடவுளின் தண்டனை…

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தான் ஜீவ ஜோதி. சரவணபவன் ஹோட்டலில் உதவி மேலாளராக பணிபுரிந்தவரின் மகள் தான் ஜீவஜோதி. ஏற்கனவே 2 திருமணம் செய்திருந்த ராஜகோபாலுக்கு ஜீவஜோதி மீது மோகம் ஏற்பட்டது.

ஆனால், சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், அடியாட்கள் மூலம் சாந்தகுமாரை கொடைக்கானல் கடத்தி சென்று கொலை செய்து பிணற்றை வீசிவிட்டார்… இதுவே இன்று அவர் ஜெயிலில் காலத்தைக் கழிப்பதற்கு காரணம்… என்னதான் பணம் இருந்தாலும் ஒழுக்கம் தவறிய ஆணின் பரிதாபநிலையைப் பார்த்தீர்களா?