பொதுவாக சிலருக்கு இரவு நேரத்தில் எவ்வளவு நோரமாகியும் தூக்கம் வரமால் கஷ்டப்படுவதுண்டு.
அதற்காக பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பதுண்டு, இருப்பினும் இதனால் நாளடைவில் அதற்கு அடிமையாகிவிட நேரிடும். அதோடு பக்க விளைவுகளையும் சந்திக்கக்கூடும்.
இதில் இருந்து எளிதில் விடுபட நமது முன்னோர்கள் கையாண்டு வந்த எளிய வழிகளில் தற்போது ஒரு முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
- தேன் – 1/4 ஸ்பூன்
- கல் உப்பு – 1 சிட்டிகை
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் முன் உட்கொண்டு, நீரைக் குடிக்க வேண்டும்.
இல்லாவிடின் தேங்காய் எண்ணெய் மற்றும் தேனை தனித்தனியாக உட்கொண்டு, நீரைக் குடிக்க வேண்டும். பின் ஒரு கல் உப்பை வாயில் போட்டு சாப்பிட்டு, நீரைப் பருக வேண்டும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்து கலவை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைத்து, தூக்கமின்மையைப் போக்கும்.