சென்னையில் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளியந்தோப்பை சேர்ந்த வெங்கடேசன் – சங்கீதா தம்பதிக்கு யூவஸ்ரீ (8) என்ற மகளும், கிருஷ்ணகுமார் (4) என்ற மகனும் உள்ளனர்.
நேற்றிரவு வீட்டில் வெங்கடேசன் மற்றும் குடும்பத்தார் படுத்து தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் பயங்கரமான சத்தம் கேட்டதால் வெங்கடேசன் கண்விழித்தார்.
பின்னர் மின்விளக்கை போட்ட போது அதிர்ச்சியில் உறைந்தார் வெங்கடேசன்.
காரணம், வீட்டின் சிமெண்ட் மேற்கூரை அவரின் மனைவி சங்கீதா மற்றும் மகள் யுவஸ்ரீ மீது விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சங்கீதா ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பின்னர் சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீயும் இறந்தார்.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில் வெங்கடேசன் கூறுகையில், வீட்டின் உரிமையாளரிடம் வீட்டின் மேற்கூரை குறித்து கூறியும் அதை அவர் சரிசெய்யவில்லை.
இதனால் தான் இருவரையும் இழந்துவிட்டேன். என் மகன் கிருஷ்ணகுமார் என்னுடன் கட்டிலில் படுத்திருந்தான், அவனும் கீழே படுத்திருந்தால் அவனையும் பறிகொடுத்திருப்பேன் என கூறியுள்ளார்.