அரச தனியார் பேரூந்துச் சாரதிகளே..! நடத்துனர்களே..!
உங்களிடம் ஓர் பணிவான வேண்டுகோள்.
உங்களிற்கும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் அல்லது சகோதரகள் அல்லது உறவினர்கள் இருக்கக்கூடும் .
அவர்களைப் போலவே இயக்கச்சி தொடக்கம் முகமாலைமற்றும் முருகண்டி தொடக்கம் மாங்குளம் வரையிலான பிரதான வீதியில், பாடசாலைச் சீருடையுடன் ஒவ்வொரு பேருந்துக்கும் கையைக் காட்டி நிறுத்தக்கோரும் அந்தப்பிள்ளைகளின் நிலமைகளையும் கவணத்தில் கொள்ளுங்கள் .
ஒரு ஆசானோ, அதிபரோ, பாடசாலை செல்வது எதற்காக? இந்தப் பிள்ளைகளிற்கு கற்பிக்கத்தானே ?
ஆனால், அந்த மாணவர்களை நீங்கள் ஏற்றாமல் ஏட்டிக்கு போட்டியாக ஓடி என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்? ஒரு ஆசானுக்கோ அல்லது பணியாளனுக்கோ ஒரு நிமிடம் பின்தள்ளிப் போனால், அவர்களை உள்வாங்கிக் கொள்வார்கள்
அதன் உயரதிகாரிகள் .
அவர்களை அடிப்பதும், மாணவர்கள் மத்தியில் கசப்பான வார்த்தைகளால் பேசுவதுமாக, அவர்களும் துன்புறுத்திக்கொள்கிறார்கள்.படிப்பதற்காக காலையில் செல்லும் இம் மாணவர்கள் இவ்வாறான பேச்சுக்களின் பின் தொடர்ந்து கற்கத்தான் முடியுமா..?
கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் இந் நாட்டிற்கு திடகாத்திரமான பணியாற்றும் நீங்கள் இதுவும் உங்கள் கடமைகளில் ஒன்றாக எண்ணி வீதிகளில் வெள்ளை சீருடையுடன் நின்று மறித்திடும் மாணவச் செல்வங்களை உங்கள் பேரூந்துகளில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
இன்றய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை மறவாதீர்கள்…..!
5 நிமிடம் நீங்கள் தாமதமாகப் போனாலும், 5 மாணவர்கள் உங்களால் பாதிக்கப்படவில்லை எனப் பெருமை கொள்ளுங்கள்…….
இனிமேலாவது செய்வீர்களா…?
இது வட மாகாண அரச தனியார் பேரூந்துச் சாரதிகளுக்கு சமர்ப்பணம்…!