மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், பிரச்சாரத்தின் போது பல குழப்பங்கள், புறக்கணிப்புகள் அரங்கேறி வருகிறது.
நேற்று, சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்ற கூட்டத்தில் திமுக வேட்பாளர் பங்கேற்காதது ஒரு பக்கம் சலசலப்பை ஏற்படுத்த, இன்னொரு பக்கம், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் புறக்கணித்து கலைந்து சென்ற நிகழ்வு, திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் அந்த வேட்பாளர் கலந்து கொள்ளாமல் இருந்தது, கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியில் ஏற்படுத்தியது.
இது ஒரு புறம் நடக்க, விழுப்புரத்தில் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, விழுப்புரத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து சென்ற காட்சி, ஸ்டாலினை அதிர வைத்துள்ளது.
குறிப்பாக, ரவிக்குமார் பேசும்போது இருந்த விசிக தொண்டர் கூட்டம், ஸ்டாலின் பேசும்போது கலைந்து சென்ற கட்சியை கண்ட ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகினர்.