தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக கால் பதித்து இன்று முன்னணி நடிகராக கலக்கி வரும் சிம்புவின் தம்பி குறளரசுக்கு வரும் 26 ஆம் தேதி திருமணம் அவரின் இல்லத்தில் மிக எளிதாக நடக்க உள்ளது.
டி.ராஜேந்திரனின் இரண்டாவது மகனும், சிம்புவின் சகோதரருமான குறளரசன் ஒரு சில படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் ஒரு இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
இந்நிலையில், வரும் 26ம் தேதி குறளரசனுக்கு தனது வீட்டிலேயே எளிமையான முறையில் திருமணம் நடக்க உள்ளது. இதனையடுத்து, திருமண அழைப்பிதழை அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் உறனர்களுக்கு டி.ராஜேந்தர் நேரில் சென்று அழைப்பு கொடுத்து வருகிறார்.
இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம்.
குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்.#டிராஜேந்தர் |#சிம்பு | #குறளரசன் pic.twitter.com/8fxPyOocc3— Vijayakant (@iVijayakant) April 5, 2019
நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு தனது மகன் குறளரசனுடன் நேரில் சென்ற டி ராஜேந்தர், விஜயகாந்த் அவர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.