கழுத்தறுக்கப்பட்ட நிலையில், முட்புதருக்குள் பிணமாக கிடந்த தமிழ் மாணவி!

பொள்ளாச்சி – தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிப்பட்டி என்ற இடத்தில் மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கோவை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 20 வயதுடைய பிரகதி என்ற மாணவியே பிணமாக கிடந்துள்ளார்.

இவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இது மாணவி பிரகதி என உறுதி செய்துள்ளனர்.

மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாகவும், அவர் அணிந்திருந்த நகை அப்படியே உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டரா அல்லது காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவே கோவையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி 6 வயது சிறுமியொருவர் காணாமல் போன நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மறுநாள் அவரது வீட்டிற்கு அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடைபெற்று அதன்தாக்கம் குறையாத நிலையில் கோவை அருகே மற்றுமொரு திகில் சம்பவம் பதிவாகி உள்ளது.