பிரித்தானிய இளவரசர் வில்லியம் கடந்த 3 வாரங்களாக பிரித்தானிய ரகசிய புலனாய்வு அமைப்பில் வேலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக GCHQ-யின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக ராணி, லண்டனில் உள்ள வாட்டர்கேட் ஹவுஸின் முன்னாள் உயர்மட்ட இரகசிய தளத்தை பார்வையிட்டார்.
அதன் பிறகு இளவரசர் வில்லியம் ரகசிய புலனாய்வு அமைப்பில் சேர்ந்துள்ளார். முதல் வாரம் வெளிநாட்டு புலனாய்வு பிரிவு MI6-ல் வேலை செய்துள்ளார்.
அங்கு, உலகம் முழுவதிலும் உள்ள பிரித்தானிய உளவாளிகள் தகவல்களை சேகரித்து, நாட்டின் நலன்களை மேம்படுத்துவதை பற்றி தெரிந்துகொண்டுள்ளார். மேலும், இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்களைப் பற்றி தெரிந்துள்ளார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது வாரம் உள்நாட்டு புலனாய்வு சேவை MI5-ல், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் எப்படி விசாரணை மேற்கொள்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்காக சென்றுள்ளார்.
மூன்றாவது வாரம் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்பான GCHQ-ல், அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, பகுப்பாய்வு செய்வதற்கும், தடை செய்வதற்கும், தொழில்நுட்ப நுணுக்கம் பற்றியும் கற்றறிந்ததாக அரண்மனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று வார பணியானது சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து GCHQ யின் பயங்கரவாத நடவடிக்கைகளின் தலைவர் டேவிட் (என்ற பெயரில்) கூறுகையில், இளவரசர் அணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள கடினமாக உழைத்தார். சில மிகவும் திறமையான ஆய்வாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் மத்தியில் தன்னுடைய சொந்த கருத்தினை பேசினார். அங்கு ஒரு அந்நியர் போலவே அவர் இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இளவரசர் வில்லியம், எங்களது பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புக்களில் நேரத்தை செலவிடுவது, நமது தேசிய பாதுகாப்பிற்கு அவர்கள் செய்யும் முக்கிய பங்களிப்பைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளுதல், உண்மையிலேயே தாழ்மையுள்ள அனுபவம் எனத்தெரிவித்துள்ளார்.