பிரித்தானிய தாய் ஒருவர் வயிற்றில் இருக்கும் போதே தன்னுடைய குழந்தை உயிரை காப்பாற்றியதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த யாஸ்மின் ராண்டால் (29) என்பவர் 6 வார கர்ப்பிணியாக இருந்த போது, ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக தன்னுடைய கணவர் கார்ல் பெர்ரிஸ் (28)- ஐ அழைத்துக்கொண்டு உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்து பார்க்கும் போது, குழந்தை நலமாக இருக்கிறது என கூறியுள்ளனர். ஆனால் அதன்பிறகும் பரிசோதனை தொடர்ந்துள்ளது.
இதனால் யாஸ்மினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்கள் கழித்து பரிசோதனை செய்த பெண், உங்களுடைய சிறுநீரகப்பையில் கட்டி இருக்கிறது. அது தீவிரமாக இருக்கிறதா என்பது குறித்து எனக்கு தெரியாது. எதற்கும் நீங்கள் சவுத்தாம்ப்டன் பொது மருத்துவமனக்கு சென்று சோதனை செய்து பாருங்கள் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்த யாஸ்மின் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், செண்டிமீட்டர் அளவிலான கட்டி ஒன்று இருப்பதை உறுதி செய்தனர். குழந்தை நலமாக இருக்கிறது. ஆனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.
இதில் குழந்தை உயிருடன் இருக்குமா என்பது தெரியாது. அப்படி செய்ய தவறினால் கட்டி உடல் முழுவதும் பரவ ஆரம்பித்து, ரத்த போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் 19 வார கர்ப்பிணியாக இருந்த போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 12 நிமிட அறுவை சிகிச்சையில் கட்டி அகற்றி எடுக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய யாஸ்மின், அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. அதேசமயம் அடுத்த 48 மணி நேரம் எங்களுக்கு மிகவும் முக்கித்துவம் வாய்ந்த நேரமாக இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் கருச்சிதைவு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
ஒரு வாரம் கழித்து 20 வார ஸ்கேன் செய்து பார்த்தோம். அப்பொழுது எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. குழந்தை உள்ளே கை, கால்களை அசைத்து கொண்டிருந்தது.
கேன்சர் கட்டியாக மாற வேண்டியதை முன்கூட்டியே அறுவை சிகிசிச்சை செய்து அகற்றிவிட்டதால் எனக்கு இனிமேல் பரிசோதனை தேவை இல்லை என என்னுடைய ஆலோசகர் கூறினார்.
பிப்ரவரி 5ம் திகதி நலமுடன் எனக்கு குழந்தை பிறந்தது. தற்போது என்னுடைய குழந்தையின் வளர்ச்சிக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அவள் வளர்ந்ததும், எப்படி என்னுடைய உயிரை காப்பாற்றினால் என்பதை கூறுவதற்கு ஆவலாக இருக்கிறேன்.
அவள் மட்டும் என்னுடைய கருப்பையில் இல்லையென்றால் நான் ஸ்கேன் செய்திருக்கவே சென்றிருக்க மாட்டேன் என கூறியுள்ளார்.