கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டையை அடுத்துள்ள கேட்டநாயக்கன்பட்டியை சார்ந்தவர் ரவி (வயது 50). இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் காமாட்சி (வயது 45). இவர்கள் இருவருக்கும் மகள் ஒருவர் உள்ளார்.
அதே பகுதியை சார்ந்த ஒரு நபருடன் காமாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த முறையற்ற பழக்கமானது ரவிக்கு தெரியவரவே., காமாட்சியிடம் இது குறித்து அடிக்கடி தகராறில் ஏற்பட்டு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறானது அடிக்கடி வாக்குவாதத்தில் நிறைவடைவது வழக்கம்.
இந்நிலையில்., கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நேற்று வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறானது வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பாக மாறியதை அடுத்து., ஆத்திரமடைந்த ரவி அரிவாளால் காமாட்சியை வெட்டி கொலை செய்துள்ளார்.
அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த காமாட்சி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோம் என்று காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.