திருமணமான 9 மாதத்தில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் தான் அப்பெண்ணை கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீகாந்த் திருமணத்துக்கு பின்னர் மனைவியை அழைத்து கொண்டு அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீகாந்தின் தந்தை ராஜேஷ்வரராவ், சந்தியாவின் தந்தை மகேந்தருக்கு போன் செய்து உங்கள் மகள் சந்தியா இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
சந்தியா அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கழுத்தில் ஆழமான வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் மற்றும் அவர் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து சந்தியாவை கொன்றுவிட்டதாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரின் தந்தை மகேந்தர் கூறுகையில், திருமணமான முதல் 6 மாதம் சந்தியாவுக்கு கணவர் குடும்பத்தினரால் பிரச்சனை எதுவும் வரவில்லை.
பின்னர் தான் ஸ்ரீகாந்த் மற்றும் அவருடன் வசிக்கும் அவர் தாய் விஜயா ஆகியோ வரதட்சணை கேட்டு சந்தியாவை கொடுமைப்படுத்த தொடங்கினார்கள்.
ரூ 1 கோடி வரதட்சணை கேட்பதாக என்னிடம் சந்தியா கூறினார், இதை கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்று அவர் மிரட்டப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.
இதனிடையில் சந்தியாவின் கணவர் ஸ்ரீகாந்த், மாமனார், மாமியார், உள்ளிட்ட 5 பேர் மீது தெலுங்கானா பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.