திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன் கோட்டை பகுதியை சார்ந்தவர் தங்கமணி (வயது 32). இவரது மனைவியின் பெயர் முனீஸ்வரி (வயது 27). இவர்கள் இருவருக்கும் சந்தோஷ் என்னும் 7 வயதுடைய மகனும்., ஹர்சவர்த்தினி என்னும் 5 வயதுடைய மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களின் தகராறை சில நேரத்தில் இல்லத்தில் இருக்கும் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்து வந்துள்ளனர்.
என்னதான் பெரியவர்கள் ஆலோசனை கூறி சமரசம் செய்தலும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். பணிக்கு செல்லும் சமயத்தில் குழந்தைகளை முனீஸ்வரியின் தாயார் இல்லத்தில் சென்று விட்டுவிட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில்., நேற்று வேலை முடிந்தவுடன் குழந்தைகளை இருவரும் அழைத்து கொண்டு இல்லத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே., இருவருக்கும் இடையே தகராறு துவங்கியுள்ளது. இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதை அடுத்து., அங்கிருந்த சுத்தியலின் மூலமாக முனீஸ்வரியின் தலையில் தங்கமணி பயங்கரமாக தாக்கியுள்ளார்.
இதனால் நிலைகுலைந்த அவர் மயங்கவே., மனைவி இறந்துவிட்டால் என்று நினைத்து ஆத்திரத்தில் செய்து விட்டோமே என்று எண்ணி தற்கொலை முடிவு எடுத்துள்ளார். நாம் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்று எண்ணி., குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்துள்ளார்.
அந்த சமயத்தில் மயக்கத்தில் இருந்து தெளிந்த முனீஸ்வரியின் முனங்களை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தங்கமணி மற்றும் குழந்தைகள் இறந்தும்., முனீஸ்வரி உயிருக்கு போராடியும் இருந்துள்ளார்.
முனீஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., முனீஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்., விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியது.