11 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீர்ராக களமிறங்கிய அல்ஜாரி ஜோசப் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதின.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிகபட்சமாக கீரன் பொலார்டு 46 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 136 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு துவக்கம் சரியாக அமையாததால், அடுத்தடுத்து மளமளவென விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. 17.4 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இந்த போட்டியின் மூலம் ஐபில் போட்டிக்கு அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் அல்ஜாரி ஜோசப். 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் சோஹல் தன்வீரின் (6/14) 11 ஆண்டுகால சாதனை முடியடிக்கப்பட்டுள்ளது.