திடீரென ஏற்பட்ட பயங்கரம்!! காணொளி..

இரத்தினபுரி சீவலி மைதானத்தில் திடீரென சுழற்காற்று ஏற்பட்டுள்ளது.

அந்த மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டு போட்டிக்கு இடையே இந்த சுழற்காற்று ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மைதானத்தில் விளையாட்டு போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த இல்லம் ஒன்றும் காற்றில் தூக்கி எறியப்பட்டது.

எனினும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.