திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை, அந்த கட்சியில் உள்ள உயர் சாதி வகுப்பை சேர்ந்தவர்கள் கட்ட கூடாது என்று பிரச்சாரத்தில் எழுதிக்கொடுக்காத சட்டமாக கடைபிடித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது வெளிப்படையாகவே விசிக தலைவர் திருமாவளவன் தெரியும். வேறு வழியில்லை என்று அனைத்தையும் பொறுத்து கொண்டு இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அனைத்து அரசியல் கட்சிகளுமே இன்று தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், விசிக கொடியை கூட சாதி வன்மத்துடன் திமுக நிர்வாகிகள் ஒதுக்கி வரும் புகைப்படங்கள் காணொளிகள் வெளியாகி விசிக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்க நடந்த பொது கூட்டத்தில், வேட்பாளர் ரவிக்குமார் பேசும் வரை காத்து இருந்த விசிக தொண்டர்கள், முக ஸ்டாலின் பேச மைக்கை தொட்ட அடுத்த கணமே, அவரின் பேச்சை புறக்கணித்து கிளம்பு ஆரமிப்பித்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான முக ஸ்டாலின் நிலைமையை உணர்ந்து தனது உரையை விரைவில் முடித்து கொண்டு அவரும் புறப்பட்டார்.