சென்னையில் உள்ள பகுதியில் பெற்றோரை இழந்த சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அவரின் 22 வயதுடைய உறவினர் கவனித்து வந்துள்ளார். பின்னர் சில நாட்களுக்கு பின்னர் அந்த சிறுமியை அந்த வாலிபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில்., அந்த பெண் கர்ப்பமாகவே அவருக்கு குழந்தை பிரசவிக்க மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அந்த சமயத்தில் இவரை கண்ட மருத்துவர்கள் சிறுமியின் வயது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அந்த சிறுமி தனது வயது 16 என்று கூறவே., பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும்., அந்த சிறுமியின் மீது அந்த இளைஞர் அதிக பாசம் வைத்து கவனித்து கொண்டு வந்துள்ளார்.
இரவு நேரத்திலும் பகல் நேரத்திலும் சிறுமிக்கு ஆதரவாக அவரை விட்டு பிரிய மனமில்லாது அங்கேயே இருந்து வந்துள்ளார். இந்த தகவலை மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தவே., தகவலை அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையில்., சிறுமி தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தால் பெற்றோரை இழந்து தவித்த போது ஆதரவளித்த இளைஞரை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதும்., இப்போது அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யும் பட்சத்தில்., தனக்கு ஒரு உதவி செய்ய கூட ஆள் இல்லை என்பதை தெரிவித்துள்ளர்.
இதனை கேட்டு கண்கலங்கிய காவல் துறையினர்., அந்த இளைஞரை கைது செய்தால் சிறுமிக்கு யார் இருக்கிறார்? அவரை கவனித்துக்கொள்ள என்று நினைத்து., கைது செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில்., தங்களின் உயர் அதிகாரியிடம் விஷயத்தை தெரிவித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.