தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களின் மீது சேற்றைவாரி இறைப்பதை போல ஸ்டாலின் மிக தரம்குறைந்த வாதைகளால் விமர்சித்து வருகினறார்.
இதனை கண்டிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பிரச்சார கூட்டத்தில், “கஷ்டப்பட்டு அரசியல்வாதியாகி இருந்தால் அருமை தெரியும். அவர் கலைஞரின் வாரிசு என்ற ஒற்றை தகுதியை வைத்து அரசியலுக்கு வந்தவர். ஒரு சாதாரண தொண்டன் முதலமைச்சரானால் எவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கு? எவ்வளவு பேச்சு பேசுகிறார்?
ஒரு தலைவர் பேசுகிற பேச்சா அது? கோயம்புத்தூரில் பேசும் பொழுது அப்படி தான். ஸ்டாலின் இப்படி தரக்குறைவாக பேசுவது போல் நாங்கள் பேசினால், அவரது காது சவ்வு கிழிந்து விடும். நான் கிராமத்திலிருந்து வந்தவன்.
உண்மையில் மனிதப் பிறவியாக இருந்தால், இப்படி பேசமாட்டார். ஸ்டாலின் மனித பிறவி அல்ல. அவர் ஒரு ஈனப்பிறவி. அரசியலில் நேரடியாக மோதினால் நாங்கள் பதில் அளிக்க தயார். தைரியமாக நாட்டு மக்களிடம் என்னென்ன செய்வோம் என நாங்கள் வெளிப்படையாக பேசுகிறோம்.
ஸ்டாலின் அப்படியா பேசுகிறார்? மக்களுக்கு நல்லது பற்றி பேசுகிறாரா? துணை முதல்வரை திட்டுகிறார், என்னை திட்டுகிறார், கூட்டணி கட்சி தலைவர்களை வசைபாடுகிறார், இதைத்தான் பேசுகிறாரே தவிர நாட்டு மக்களுக்கு என்ன திட்டம் செய்வோம் என்பதை பேசவில்லை.” என மிக ஆவேசமாக பேசியுள்ளார்.