கணவரால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட நடிகை சந்தியா!

தனது கணவரால் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் இறுதி சடங்கிற்காக அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 21-ந் தேதி பெருங்குடி குப்பை கிடங்கில் சந்தியாவின் 2 கால்கள், ஒரு கையும், பிப்ரவரி மாதம் 6-ந் தேதி

சென்னை ஜாபர்கான்பேட்டை பாலத்தின் அடியில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கில் நடிகை சந்தியாவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது.

சந்தியாவின் தலை, உடல், மற்றொரு கை ஆகியவற்றை பெருங்குடி குப்பை கிடங்கில் பல நாட்களாக தேடியும் கிடைக்காததால், உடலை தேடும் பணியை பொலிசார் கைவிட்டனர்.

தவறான நடத்தை காரணமாக தனது மனைவியை கொலை செய்த சந்தியாவின் கணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தங்கள் மகள் சந்தியாவுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டி இருப்பதால், பொலிசார் இதுவரை கண்டெடுத்த சந்தியாவின் உடல் பாகங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது தாய் பிரசன்னகுமாரி, தந்தை ராமச்சந்திரன் ஆகியோர் பள்ளிக்கரணை மனு கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைத்து இருந்த சந்தியாவின் உடல் பாகங்களை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.