தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று என வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி 5.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் சுமார் 1,500 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்ததாகவும், 67 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஊடகம் ஒன்று, அந்த நிலநடுக்கம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதனை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த நிலநடுக்கத்தினை சுவிட்சர்லாந்தினைச் சேர்ந்த Markus Häring என்பவரே செயற்கையாக உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
தென் கொரியாவின் Pohang பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, அப்பகுதியில் நடத்தப்பட்ட geothermal சோதனைகளின் தொடர்ச்சியே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.geothermal நிபுணர் ஆயசமரள Markus Häring ஐ பொறுத்தமட்டில், கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஸல் பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்திற்கு காரணமானவர் என ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.