வரும் மக்களவை தேர்தல் வாக்கு பதிவு நடக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலயில், அமைந்து கூட்டணி, அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சைகள் களத்தில் இரங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் திமுகவில் தாய் கழகமான திராவிட கழகம், எப்போதும் போல திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் கடவுள் மறுப்பு கொள்கை என்ற பெயரை இந்து மத கடவுள்களை கடுமையாக விமர்சித்து வரும் திக-வின் தலைவர் சமீபத்தில் கிருஷ்ணரை கீழ்த்தரமாக விமர்சித்து சிக்கலில் மாட்டி கொண்டார்.
முதலில் இதற்க்கு மௌனம் சாதித்த முக ஸ்டாலின் பிறகு கீ. வீரமணிக்கு ஒரு கண்டனத்தை தெரிவித்தார். மேலும் நான் இந்துக்களுக்கு எதிரி இல்லை என்றும் அறிவித்தார். ஆனால், இதற்க்கு பின்னும் ஒரு சாதி அரசியலை முக ஸ்டாலின் கமுக்கமாக நிகழ்த்தியுள்ளார்.
அதாவது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன், அக்கட்சியை விட்டு விலகி, திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து திமுக கூட்டணியில் அவரின் யாதவர் சாதி கட்சியையும் கூட்டணியில் இணைத்து கொண்டார். இதற்கிடையே இந்து கடவுளான கிருஷ்ணர், யாதவ சமூகத்திற்கு நெருங்கிய தொடர்புடைய கடவுள் என்பதால், கீ. வீரமணிக்கு ஒரு கண்டனத்தை தெரிவித்து பேட்டியளித்து இருந்தார்.
அதில், ”இந்துக்களின் கடவுள் கிருஷ்ணரை தி.க., தலைவர் வீரமணி விமர்சித்தது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவிக்கவே, எங்கு திமுகவிற்கு கிடைக்க வேண்டிய யாதவ மக்களின் ஊட்டு கிடைக்காமல் போய் விடுமோ, என்ற பயத்தில் தான் ஸ்டாலின் ஒரு கண்டனத்தையும், நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்றும் கதறியுள்ளார்.
இருப்பினும், யாதவ சமூக மக்கள் மனதில் கீ வீரமணி கூறியது ஆரா வடுவாக மாறியுள்ளது. இது வரும் தேர்தலில் திமுகவிற்கு எதிராக திரும்பலாம் என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கவே, ஸ்டாலின் கீ வீரமணி இடம் கொஞ்சம் அமுக்கி வாசிக்க சொல்லியிருக்கிறார்.