அந்தரத்தில் தொங்கிய தாய்.!! அலறி ஓடிய குழந்தைங்கள்.!

அரக்கோணம் ஜோதி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி சித்ரா (வயது 30). இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவரை விட்டு பிரிந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை கண் விழித்த சித்ராவின் மகள்கள் தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அழுதனர்.

இதுகுறித்து அரக்கோணம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அரக்கோணம் டவுன் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாத் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.