நாம் நமது உடலில் ஏற்படும் பிரச்சனைகளை குறைப்பதற்கும்., நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் பெரும்பாலும் தேன் வாங்கி சாப்பிடுவது உண்டு. நாம் சாப்பிடும் தேன் சுத்தமான தேனா? என்ற சந்தேகமானது இருப்பது வழக்கம்.
அந்த வகையில்., தேனில் சில சோதனைகள் செய்வது குறித்த செய்தியை மேலே படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும்., தேனின் சுவையை வைத்தே அந்த தேன் எந்த பூவில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் நாம் அறியலாம். இதுவும் தேனின் தன்மையை சோதனை செய்யும் ஒரு நிகழ்வாகும்.
நாவற்பழ மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தேனானது இனிப்பு கலந்த கசப்பு சுவையுடன் இருக்கும். இந்த இனிப்பு கலந்த கசப்பு சுவையானது சற்று அதிகளவு இருக்கும். வேப்ப மரத்தில் இருந்த்து எடுக்கப்படும் தேனின் சுவை இனிப்பு கலந்த கசப்புடன் இருக்கும். இந்த வேப்ப தேனை பெரும்பாலும் நாட்டு வைத்தியர்கள் சில நோய்களை குணப்படுத்தும் சமயத்தில் சேர்த்துக்கொள்வார்கள்.
தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் தேனானது இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடன் இருக்கும் மற்றும் கொசுத்தேன் என்று அழைக்கப்படும் தேனானது புளிப்பு சுவையுடன் இருக்கும். மேலும்., நாம் எந்த வகையான தேனை சாப்பிட்டாலும் தேனை சாப்பிட்டு முடித்தவுடன் சிறிதளவு காரத்தை நாம் உணர வேண்டும். அதுவே சுத்தமான தேன் எனப்படும்.
இதுமட்டுமல்லாது தேனின் நிறத்தையும் அறிந்து கொள்ளுங்கள்:
தேனை பொறுத்த வரையில் பருவநிலை மற்றும் பூவை பொறுத்து அதன் நிறமானது மாறுபடும். மலைத்தேன் மஞ்சள் நிறத்திலும்., முருங்கைத்தேன் இளம் மஞ்சள் நிறத்திலும்., நாவற்பழத்தேன் கருமை நிறைந்த கருப்பு மற்றும் காபி நிறத்திலும்., வேளஞ்ச தேன் காபி நிறத்திலும்., குறிஞ்சித்தேன் மற்றும் கொசுத்தேன் பச்சை நிறத்திலும் காணப்படும்.