நன்றாக தூங்கி கொண்டு இருக்கும்போதும் பலரும் குறட்டை விடுவது என்பது வாடிக்கையான ஒன்று தான். தூங்கும் போது மூச்சுப்பாதையில் ஏற்படும் தடைகளே குறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறப்படுகிறது.
நாம் உறங்கும் போது தொண்டை தசை தளர்வடைந்து மூச்சுப்பாதையின் அளவு குறைவதால், மூச்சுக்காற்று நுரையீரலுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் போது தான் குறட்டை ஏற்படுகிறது. மேலும், மேல் நோக்கி படுத்து உறங்கும் போது நாக்கு உள்வாங்கி தொண்டையில் இறங்கி, மூச்சுப்பாதையை அடைப்பதால் குறட்டை சத்தம் வரும்.
சளி இருப்பதால் ஏற்படும் மூக்கடைப்பு, சுவாச அலர்ஜி, சைனஸ், தைரய்டு பிரச்சனையால் தொண்டையை சுற்றி ஏற்படும் வீக்கம், உடல் பருமனால் கழுத்தில் படியும் கொழுப்பு ஆகியவைகளால் குறட்டை ஏற்படும் . மேலும் புகை, மது பழக்கங்களால் தொண்டையில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றால் மூச்சுக்காற்று உள் செல்வதில் தடை ஏற்படுதல் கூட குறட்டை ஏற்படுகிறது.
குறட்டை வருவதால் நமக்கு ஏற்படும் தீமைகள் :
குறட்டையின் சத்தம் , சில நேரங்களில் ஏற்ற இறக்கத்துடன் கேட்கும், திடீரென அறவே சத்தம் குறைந்துவிரும். அவ்வாறு ஏற்பட காரணம் மூளைக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதாகும். இது உயிருக்கு கூட ஆபத்தாக முடியும்.
இந்த நேரங்களில் சத்தம் குறைந்து, திடீரென உடலில் குலுங்கள் ஏற்படும். இதனால் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
காலையில் எழுந்தவுடன் கடுமையான தலைவலி, உடல் சோர்வு, வேலையில் கவனமின்மை, ஞாபக மறதி, ரத்த அழுத்தம் அதிகரித்தல், நுரையீரல் பாதிப்பு, மூளை பிரச்சனை உள்ளிட்ட ஆபத்தான நெய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.