அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டுக்கு சீனாவின் மேச்சன்ட்ஸ் போட் ஹோல்டிங் நிறுவனம் நிதி வழங்கியிருந்தது. ஆனால் அந்த நிதியை இலங்கை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்ட 146 மில்லியன் அமெரிக்க டொலர்களையே, இலங்கை துறைமுக அதிகார சபை திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன நிருவனத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியமையே இதற்கு காரணமெனவும் எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு முன்னர் குறித்த நிதியை திருப்பி செலுத்த வேண்டுமெனவும் கூறப்படுகின்றது.
ஆனால் இவ்விடயத்தை துறைமுக அதிகார சபை முற்றாக நிராகரித்துள்ளதுடன் சீனாவினால் வழங்கப்பட்ட நிதி உரிய வேலைத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.