உடல் எடையை குறைப்பது தான் இன்றைக்கு பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும்.
நமக்கு தேவையான கலோரிகள் போக மீதமிருக்கும் கலோரிகள் கொழுப்பாக மாறிடுகின்றன. அந்த கலோரியை எரிக்க போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாறாக தொடர்ந்து இப்படி கலோரி சேரும் பட்சத்தில் அவை கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
இதனை தவிர்க்க நீங்க என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
அன்னாசிப்பழம்
உடல் எடையைக் குறைக்க அன்னாசிப் பழத்தையும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அன்னாசிப் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட் , மினரல்ஸ்,விட்டமின்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது.
அன்னாசிப்பழத்தின் சிறப்பு… ‘ப்ரோமிலைன்’ என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது.
‘ப்ரோமிலைன்’ உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிட வேண்டும்.
அவகோடா
அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. அதோ இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன் கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
தர்பூசணி
தர்பூசணியில் தண்ணீர் சத்து மட்டுமே நிறைந்திருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை அதிகரிப்பதோடு தசைகளை வலிமையாக்குகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பேரிக்காய்
பேரிக்காய் எடுத்துக் கொண்டால் செரிமானத்தை சீராக்கும். அதோடு மலச்சிக்கல் மற்றும் பசியின்மைக்கு தீர்வாக அமைந்திடுகிறது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை என்று ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது குறையும் அதே சமயம் ஜீரணமாகாத உணவு வகைகளினால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.
பீச் பழம்
உடல் எடையை விட இன்னொரு மிக முக்கியப் பிரச்சனை என்றால் அது தொப்பை தான். பலருக்கும் நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்க வேண்டிய சூழல், அதே சமயம் உடல் உழைப்பும் இல்லாததால் தொப்பை வந்து விடுகிறது.
தொப்பையை குறைக்கும் மிக முக்கியமான பழம் எது தெரியுமா? பீச் பழம். தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தினமும் ஒரு பீச் பழம் சாப்பிடுங்கள். இந்தப் பழம் குடலை சுத்தம் செய்கிறது. அதோடு பீச் பழத்தில் இருக்கும் போனோலிக் அமிலம் தொப்பையை கரைக்க உதவுகிறது.