தங்கத்தின் விலை இன்று திடீரென அதிகரித்திருக்கிறது. டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 33,215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இன்று மட்டும் டெல்லியில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 425 ரூபாய் அதிகரித்திருக்கிறது. தங்கத்தோடு வெள்ளி விலையும் அதிகரித்திருக்கிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 38,670 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இன்று ஒரே நாளில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 170 ரூபாய் அதிகரித்திருக்கிறது.
கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 06, 2019 அன்று வர்த்தகமான 10 கிராம் தங்கத்தின் விலை 32,790-ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும் தங்கத்தின் விலை அதிகரிக்க முக்கியக் காரணமாக இருக்கிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.67 ரூபாய்க்கு வர்த்தகமாகம் நிறைவடைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து ஒட்டு மொத்த ரூபாய் மதிப்பையும் காலி செய்து கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் என்கிற ஒரு நெகட்டிவ் செய்தியால் மட்டுமே தற்போது டாலர் கொஞ்சம் விலை கூடி இருக்கிறது.
பங்குச் சந்தைகளைப் போல விற்கப்படும் இடங்களில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 0.4 சதவிகிதம் அதிகரித்து 1,296 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்திருக்கும் SPDR Gold Trust ஃபண்டுகளே கடந்த வாரம் சுமார் 3% சரிவைக் கண்டதும் குறிப்பிடத்தக்கது.