இலங்கையில் நிலவிவரும் அதிகரித்த வெப்பம் காரணமாக நாய் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் நீர் நிலைகளினைத் தேடிச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணத்திலும் இவ்வாறான விலங்குகள் வற்றும் நிலையிலுள்ள குளங்களினை நாடிச் செல்வதனை அவதானிக்கக்கூடியவாறு உள்ளது.குளத்தில் இறங்கி தமது உடலை தண்ணீருக்குள் விட்டு அவை குளிர்தேடுகின்ற காட்சிகளை பரவலாக காணமுடிகிறது.
இவ்வாறு விலங்குகளும் நீர் நிலைகளை நாடிச் செல்லுமளவுக்கு வெப்பநிலை தீவிரமடைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை எதிர்வரும் 15ஆம் நாள் தொடக்கம் இலங்கையில் அதிகரித்த வெப்ப நிலை நிலவுமென்பதால் பொதுமக்கள் அனைவரும் வெளியில் பிரசன்னமாவதைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.