பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகத்தின் 6 ஆவது மாடியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டபோது, பிரதமர் அலுவலகத்தில், இம்ரான் கான் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.
தீ விபத்து குறித்து இம்ரான் கானுக்கு தெரிவிக்கப்பட்டும் கூட, அவர் உடனடியாக பிற ஊழியர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டுவிட்டு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.
உடனடியாக விரைந்து வந்த மீட்புப் படையினர், தீயை அனைத்து, அங்கிருந்த முக்கியப் பொருட்களை பாதுகாப்பாக மீட்டனர்.