அபுதாபியை சேர்ந்த இளம்பெண் தேனிலவின் போது தனது கணவரின் மோசமான அணுகுமுறையை கண்டு வெறுப்படைந்து அவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
இளம்பெண் ஒருவருக்கு ஈரானை சேர்ந்த இளைஞருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அந்த பெண்ணை விட இளைஞர் 13 வயது இளையவராவார். இந்நிலையில் இருவரும் ஜோடியாக தேனிலவுக்கு சென்றனர்.
தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவரின் அணுகுமுறை மோசமாகவும், மிகவும் மலிவாகவும் இருந்தது அவர் மனைவியை அதிர்ச்சியடைய செய்தது.
காரணம், கடைகளில் பொருட்கள் வாங்கியபின்னர் தனது மனைவியை அதற்கான பணத்தை செலுத்த அவர் வற்புறுத்தியுள்ளார்.
இதோடு தண்ணீர், மின்சார கட்டணத்தையும் மனைவியே செலுத்த வேண்டும் என கூறினார்.
இப்படிப்பட்ட நபருடன் குடும்பம் நடத்த முடியாது என நினைத்த மனைவி கணவருடன் விவாகரத்து வேண்டும் என அபுதாபி நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கணவரின் குணம் குறித்து குறிப்பிட்ட மனைவி, தனது கணவர் தங்களது திருமணத்தில் சிறிதளவு கூட பணம் செலவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் உள்ள அனைத்து நாற்காலிகள், டேபிள்கள் உள்ளிட்ட பொருட்களை தன்னுடய பணத்தில் வாங்கியதாக கூறியுள்ள அப்பெண் அதை அவர் கணவர் ஒப்பு கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.