நடிகை குஷ்புவுக்கு வயதாகிவிட்டது என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் எருமை குளித்தாலும் கூட்டம் கூடும். நடிகர்களுக்கு கூடுவதில் ஆச்சரியமில்லை.
குஷ்பு இளமையாக இருந்த போது கோவில் கட்டினார்கள். ஆனால் அதே குஷ்பு, திமுகவிற்காக ஓட்டு கேட்ட போது யாரும் ஓட்டு போடவில்லை.
இன்று குஷ்புவிற்கு வயதாகி வருகிறது. எனவே அவரது பிரசாரத்தை கேட்டு மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Namma @AIADMKOfficial “vingyani” thermocol rajavukku vayadhu aaghi vittudhunnu nalla theriyudhu..paavam yennanamo pesi kondu irukkuraaru.. on a serious note,glad they are noticing the crowds for me..even after 30yrs if I am able to do that, truly indebted to the ppl of TN..❤️❤️??
— KhushbuSundar..#NYAYforINDIA..#CONGRESSforINDIA (@khushsundar) April 9, 2019
இந்நிலையில் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு.
அந்த பதிவில், அதிமுகவின் விஞ்ஞானி தெர்மகோல் ராஜூவிற்கு வயதாகி விட்டது நல்லாவே தெரியுது. பாவம் என்னமோ பேசிக்கொண்டு இருக்கிறார் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, 30 வருடம் கடந்தும் எனது பிரசாரத்திற்கு கூட்டம் அதிக அளவில் வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.