குளச்சல் கோடிமுனை சைமன் காலனியை சேர்ந்த, டென்னிஸ் என்ற மீனவர் ஏப்ரல் 3ஆம் தேதி குளச்சல் கடற்கரை அருகே மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவர் அருகில் நின்ற காரில் தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்துள்ளது. அதை எடுத்துக் குடித்துள்ளார். அந்த பாட்டிலில் காருக்கு போடுவதற்காக பெட்ரோல் நிரப்பி வைக்கப்பட்டு இருந்துள்ளது.
அந்த பெட்ரோலை தண்ணீர் என்று நினைத்து குடித்த டென்னிஸ், உடனே அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.