கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் எபின் ராபர்ட். இவர் கோவை மத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.
மேலும் அவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் ஜாக்கெட் மற்றும் சேலை அணிந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அறைக்கு வந்த சக மாணவர்கள் எபின் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், எபின் ராபர்ட் நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டுமென ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியாததால் சேலை மற்றும் ஜாக்கெட் அணிந்த நிலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது. இது கல்லூரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.