ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சித்தேஷ் லட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
பயிற்சியின் போது காயமடைந்த ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. காயத்தின் தன்மை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக வெஸ்ட் இன்டிசின் கிரோன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆடாததன் மூலமாக அவர் ஒரு அறிய சாதனையை தவறவிட்டுள்ளார். ஒரே அணிக்காக தொடர்ச்சியாக ஆடிய வீரர் என்ற பெருமையானது சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவிடம் உள்ளது. அவர் சென்னை அணிக்காக தொடர்ச்சியாக 134 ஆட்டங்களில் களமிறங்கியுள்ளார். 2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரை அவர் இந்த சாதனையை செய்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா, மும்பை அணியில் அவர் இணைந்தது முதல் அணைத்து ஆட்டங்களிலும் ஆடி வந்தார். முதன்முறையாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். அவர் மும்பை அணிக்காக தொடர்ச்சியாக 133 ஆட்டங்களில் ஆடியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கோலி (2008-16) 129 போட்டிகளில் பெங்களூர் அணிக்காக ஆடியுள்ளார். சென்னை அணியின் கேப்டன் தோணி 119 (2010-19*) போட்டிகளில் சென்னை அணிக்காக ஆடியுள்ளார். இந்த வருடம் ஓய்வுபெற்ற கொல்கத்தா வீரர் காம்பிர் (2011-17) 108 போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக ஆடியுள்ளார்.
தற்போதைய சூழலில் டோனி மட்டுமே அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அதற்கு அவர் அடுத்த வருட போட்டியையும் சென்னை அணிக்காக காயம் படாமலே ஆட வேண்டும்.