ஐபிஎல் 12 வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.
அதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியுடன் மோத உள்ளது. மேலும் இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று விடியற்காலை விமானத்தில் ஜெய்ப்பூர் சென்றடைந்தது.
அதற்கு முன்னராக அவர்களுக்கு ஜெய்ப்பூர் விமானம் அதிகாலை என்பதால், போட்டி முடிந்த உடனேயே வீரர்கள் அனைவரும் விமான நிலையம் வந்தடைந்தனர்.
விமானத்திற்கு நேரம் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் காத்திருந்த தோனியும் அவரது மனைவி சாக்ஷியின் களைப்பின் காரணமாக தரையிலேயே படுத்து உறங்கி உள்ளனர். மேலும் இதனை சக வீரர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
View this post on Instagram
After getting used to IPL timing this is what happens if u have a morning flight
இந்த புகைப்படத்தை இன்று தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிக்கான நேரம் பழகிப் போனதால், காலை நேரங்களில் விமானத்தில் செல்லும் போதெல்லாம் இதுவே பழக்கமாக உள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தோனியின் எளிமையை கண்டு ரசிகர்கள் பெருமிதம் அடைந்து பாராட்டி வருகின்றனர்.