நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்காக தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகளை ஆதரித்தும், சொந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 7 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலானது 11-ஆம் தேதி (நாளை) துவங்குகிறது.
இந்நிலையில் பீகார் மாநிலம் பெலகஞ்ச்என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த துணை முதலமைச்சர் சுஷில் மோடி ஆகியோர் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.
திடீரென மோசமான வெப்ப நிலை நிலவியதால் அந்த ஹெலிகாப்டர் புத்தகாயா பகுதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது ராம்விலாஸ் பஸ்வான், சுஷில் மோடி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.