விபரீத ராஜயோகம் யாருக்கு?

ஒரு ஜாதகத்தில் இரண்டு விதமான அம்சங்கள் உண்டு.

அதே போல் வாழ்க்கையிலும் இரண்டு வழிகள் உண்டு ஒன்று நேர் வழி, மற்றொன்று குறுக்கு வழி, ஜாதகத்தில் சுய கிரக ஸ்தானங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் தனம், செல்வம் ஒருவகை அதே போல் 6,8,12 ஆகிய ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும். தனம் செல்வம் ஒரு வகை நீச கிரகம், நீச பங்கமாகி ராஜயோகம் அளிக்கும் போது சேரும் செல்வம் ஒரு வகை.

பல்வேறு ஜோதிட நூல்களின் அடிப்படையில் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பின்படி தாங்கள் சம்பந்தப்பட்ட வீடுகளை வைத்து மிகப்பெரிய அளவிட முடியாத யோகத்தையும், செல்வ வளத்தையும், குபேர சம்பத்தையும் கொடுத்துவிடும்.

இது போன்ற தன யோகத்தை ஜாதக பல தீபிகை என்ற நூல் ஹர்ஷ யோகம் என்று குறிப்பிடுகின்றது. நீசன் நின்ற ராசி நாதன் ஆட்சி உச்சம் பெற்றிடில் நீச பங்க ராஜயோகம். சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் நீங்கி ராஜயோகம். ராசியில் நீசமாக உள்ள கிரகம் நவாம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றால் ராஜயோகம்.

ராசியில் உள்ள நீசமாக உள்ள கிரகம் வர்க்கோத்தமம் பெற்றால் முதல் தர ராஜயோகம். இதைப் போன்ற கிரக தசா புத்திகளில் எதிர்பாராத விஷயங்கள், நடக்காது என்று துலங்கும். நினைக்கும் விஷயங்கள் எல்லாம் தாமாக கூடிவரும். தொட்டதெல்லாம் துலங்கும்.