பிரச்சார கூட்டத்தில் குஷ்புவுக்கு நடந்த அத்து மீறல்..!

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டிருந்தார் நடிகை குஷ்பு.

ஆனால் டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் பிரசார களத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தார். யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யவில்லை. கேட்டதற்கு படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக கூறி இருந்தார்.

தற்போது நடிகை குஷ்பு கர்நாடகாவில் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அந்த தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர் ஹொய்சலா நகரில் நடிகை குஷ்பு தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தொண்டர் ஒருவர் குஷ்புவின் பின்னால் நின்று தகாத முறையில் சீண்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பு அவரின் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இதனால் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ச்சியாக பாலியல் அத்து மீறலிலும், அடிதடி அராஜகத்திலும் ஈடுபட்டு வருவது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.