தாயாருடன் நெருக்கமாக இருந்த இளைஞன்..உண்மை தெரிந்து மகன் செய்த அதிர்ச்சி செயல்!

தமிழகத்தில் தாயாருடன் தொடர்பு வைத்திருந்த நபரை இளைஞர் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு தமிழ் செல்வன் என்ற 35 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று இவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.

அப்போது அங்கு ஒக்கூரை சேர்ந்த அருண்குமார் (23) என்பவரும் வந்தார். இருவரும் அங்கு பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று வாக்கு வாதம் ஏற்பட்டதால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அருண்குமார், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தமிழ் செல்வனை சரமாரியாக குத்தினார்.

இதைக் கண்ட அங்கிருந்த நோயாளிகள் மற்றும் வந்திருந்த உறவினர்கள் அலறி அடித்து ஓட, உயிருக்கு போராடிய தமிழ் செல்வன் அந்த இடத்திலே பரிதாபமாக துடி துடித்து இறந்தார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட போது, பொலிசார் வரும் வரை அருண்குமார் அங்கு காத்திருந்தார்.

அதன் பின் அவரை பிடித்து கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வன், அருண்குமாரின் தாயாருடன் பழக்கம் வைத்திருந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களது கள்ளக்காதல் நீடித்துள்ளது.

இதற்கிடையே அருண்குமாரின் தாயார் திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் அருண்குமார் தேடியும் கிடைக்கவில்லை.

இதனால் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வன் இருப்பதை தெரிந்துகொண்ட அருண்குமார் மருத்துவமனைக்கு சென்று, அங்கிருந்த தமிழ்செல்வனிடம் தாயார் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால், இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.