கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பான விசாரணையில் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய பல நபர்களுக்கு சம்மன் வழங்கி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். சம்மன் வழங்கியதில் அனைவரும் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரின் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் மற்றும் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயருடன் கூடிய அரசாணையை மாற்றி புதியதாக வெளியிடவேண்டும் என்ற மனுவானது நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த சமயத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரி எஸ்.பி.நிஷா பார்த்தீபன் வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும்., புதியதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையானது எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை., ஆகையால் இந்த வழக்கு குறித்து பதில் ஏதும் தெறிக்க இயலாது என்று தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை 25 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை மனுதாரருக்கு வழங்கக்கூறி உத்தரவிட்டனர்.