திமுக கூட்டணி கட்சியினர் கொடுக்கும் காசு கூட போலி.. கையும் களவுமாக சிக்கிய ஆதாரம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் பிரிண்டர் மெசின் வைத்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரிய வந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகேயுள்ள களியல் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ் நேற்று காலையில் பிணந்தோடு பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு 500 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அந்த ரூபாய் கள்ள நோட்டு என்பதை பெட்ரோல் நிலைய ஊழியர் அறிந்து, காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.

காவல்துறையினர் அங்கு சென்று ரதீஷை பிடித்து விசாரித்தனர். அதில், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவரான காங்கிரஸ் பிரமுகரிடம் ரதீஷ் வெல்டிங் வேலைக்குச் சென்றபோது, அந்த ரூபாயை பெற்றதாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தக்கலை டிஎஸ்பி கார்த்திகேயன் தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார். தனிப்படை நடத்திய விசாரணையில், திருவட்டாறு பகுதியிலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் கணினி, பிரின்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி போலியாக 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அந்த உபகரணங்களை கைப்பற்றிய காவல் துறையினர் இச்சம்பவத்தில் தொடர்புடைவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரத்துடன் காங்கிரஸ் பிரமுகர் பிடிப்பட்டுள்ளதால், தேர்தலுக்கு செலவு செய்யும் பணத்திலும் கள்ளநோட்டுகளை கலந்து விட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.