முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இந்த வருடத்தில் திருமணத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்தவின் குடும்பத்திற்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பிரபல வர்த்தகரான நவலோக்க குடும்பத்தின் மகளுடன் யோஷித திருமண பந்தததில் இணையவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த திருமணத்திற்காக பல பிரபலங்கள் அழைக்கப்படவுள்ளதாக மஹிந்த தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.