தனியாக கடை நடத்தும் நாய்…!!

பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம்.

ஆனால் ஒரு நாய் வெற்றிகரமான வணிகராக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்,ஜப்பான் நாட்டில் கென் க்யூன் என்னும் நாய் ரோஸ்டல் ஸ்வீட் பொட்டேட்டோ ஸ்டால் நடத்தி வருகிறது. கொக்கய்டோ என்ற இடத்தில் இந்த கடை இருக்கிறது.முழுக்க, முழுக்க நம்பிக்கைத்தன்மையை மட்டுமே வைத்து இந்த கடை நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது கடையில் பக்கத்தில் யாராவது வந்தாலே கென் க்யூன் நாய் டக்கென்று தலையைத் தூக்கி எட்டிப் பார்த்து, வரவேற்கும். அந்த நாயின் க்யூட்டான அணுகுமுறை தான் இந்த கடை பிரசித்தி பெற முக்கிய காரணம்.இந்த கடைக்கு வெளியில் ஒரு ஒயிட் பாக்ஸில் ரோஸ்டல் சுவீட் பொட்டட்டோஸ் இருக்கும்.

வாடிக்கையாளர்கள் அவர்களே பாக்ஸை ஓப்பன் செய்து எடுத்துவிட்டு, காசை பக்கத்தில் இருக்கும் ஓட்டையில் போட்டு விட வேண்டும். சரி இது எப்படி கடைக்கு புதிதாக வரும் வாடிக்கையாளருக்கு தெரியும் என்கிறீர்களா?

அந்த கடை பக்கத்தில் போஸ்டர் ஒன்னு இருக்கும். அதில் கடையில் விற்கும் பொருளின் விலை, கூடவே நான் ஒரு நாய், அதனால் என்னால் மீதத்தொகை சில்லறையெல்லாம் கொடுக்க முடியாது என ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டு இருக்கும்.

இதை விட சுவாரஸ்யம் என்னவென்றால் வாடிக்கையாளர்கள், தாங்கள் சாப்பிட்ட காசைத் தாண்டி கூடுதலாகக் கொடுத்தால் அது இந்த கென் க்யூன் நாயை பராமரிக்கவும், சாப்பாடு கொடுக்கவும் செலவு செய்வோம் என எழுதப்பட்டுள்ளது.இந்த கடை குறித்து அங்குள்ள ஜப்பானியர் ஒருவர் ட்வீட் செய்ய, ஓவர் நைட்டில் வைரலாகி இருக்கிறது இந்த செல்ல சேல்ஸ் நாய்க்குட்டி.